அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த அனைவரும் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து பேசி உள்ளார். ஆனால் இவர்களின் சந்திப்பு சம்பந்தமான அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியவரே நேரில் சந்திப்பது சரிதானா என பலரும் கேள்வி எழுப்பினர். மேற்கொண்டு பாஜக அண்ணாமலை இது குறித்து பாராட்டுத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அண்ணாமலை பாராட்டு தெரிவித்தது குறித்து விசிக சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில் ஆளுநர் என்பவர் ஆர்எஸ்எஸ் பற்றி வாசகம் பாடம் கூடியவர் அவரின் மகுடிக்கு விஜய் மயங்காமல் இருப்பார் என நம்புவோம்.
எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் திருமாவால் கலந்து கொள்ள முடியாததற்கு ஆளும் கட்சியின் அழுத்தம் தான் என விஜய் தெரிவித்தார் ஆனால் அது முற்றிலும் தவறு என திருமா தெரிவித்த பொழுது, தற்பொழுது விஜய் குறித்து இந்த அறிக்கை கட்சி ரீதியாக வெளியிட்டுள்ளனர். விஜய்யின் மனப்போக்கு பாஜக மேல் சாய்ந்து விடக்கூடாது என்பதை ஆணித்தரமாக கூறியது இவர்கள் கூட்டணி விரைவில் அமையும் என்று எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
குறிப்பாக விஜய் ஆட்சியில் பங்கு என்று தெரிவித்தது குறிப்பிட்ட சில கட்சிகளை தன்வசம் கொண்டு வர என பலரும் கூறியது நிருபணம் ஆகிவிடும் என்பது போல உள்ளது.