VSK: பெண் காவல் அதிகாரியிடம் அத்து மீறிய விசிக இளைஞர்கள்!! வைராலாகும் வீடியோ பதிவு!!

0
196
VSK: Infatuated youths who violated a female police officer!! Viral video!!

 

VSK: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் இளைஞர்கள் அங்கிருந்த பெண் காவல் அதிகாரியிடம் அத்துமீறிய வீடியோ வைரல்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு தொடர் சர்ச்சை கிளம்பியுள்ளது. குறிப்பாக மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி கட் டவுட் இடம்பெற்றது என தொடங்கி திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மதுபான கடைகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தியது வரை அனைத்தும் பெசும்போருளாக மாறியுள்ளது.

இவை அனைத்தும் திமுகவிற்கு எதிராக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவே அமைந்தது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது மாநாடு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கார் வரும்பொழுது அதன் முன்னிலையில் உள்ள இளைஞர்கள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீஸ் என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறி உள்ளனர்.

இளைஞர்களுடன் சேர்ந்து அங்கிருந்த விசிக பெண் நிர்வாகியும் போலீசாரை தள்ளி விட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அங்கு இருக்கும் காவல் பெண் அதிகாரிக்கே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.