VSK: மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி கட் அவுட்.. திமுகவுக்கு முழு எதிர்ப்பு!! வெடித்த சர்ச்சை!

0
135
VSK: Rajaji cut out in alcohol abolition conference.. Total opposition to DMK!! Exploded controversy!

 

VSK: விசிக தலைமையில் நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களின் உருவப்படம் கட் அவுட்டாக வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமாவளவன் அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதியான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் மது விலக்கை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று 12 தீர்மானங்கள் நிறைவைற்றப்பட்டது. இதையடுத்து விசிக தலைவர் மாநாட்டில் பேசினார்.

மது ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “இளம் வயதில் ஒருவருக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டால் மனித வளம் அழிந்து விடும். இதை அனைவருக்கும் உணர்த்தவும் மதுவிலக்கை அமல்படுத்தவும் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகின்றது.

ஆனால் இந்த மது ஒழிப்பு மாநாட்டின் முக்கியமான உயர்ந்த நோக்கத்தை அனைவரும் சிதைத்து விட்டனர். நாம் அனைத்து கட்சிகளுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். ஆனால் அதை அரசியலுக்காக செய்கிறார்கள் என்று சிலர் குறை கூறி வருகின்றனர்” என்று பேசினார். இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களின் உருவப்படம் பேனராக வைக்கப்பட்டிருந்தது. இது தற்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாஜி அவர்கள் மனு ஸ்மிர்தியை ஆதரித்தவர். அதேபோல குலக்கல்வி முறைக்கும் ஆதரவு தெரிவித்தவர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் கொள்கை முழுக்க முழுக்க எதிரானது. விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் குலக்கல்வி முறை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை எதிர்ப்பு தெரிவிப்பர். இவ்வாறு இருக்க விசிக தலைவர் திருமாவளவன் நடத்திய மாநாட்டில் கொள்கைக்கு எதிரான ராஜாஜி அவர்களின் பேனர் வைக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திருமாவளவன் அவர்கள் ராஜாஜி அவர்களின் பேனர் ஏன் வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ராஜாஜி அவர்களின் பேனர் வைக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “நம்முடைய மாநாட்டில் ராஜாஜி அவர்களின் உருவப்படம் பேனராக வைத்துள்ளோம். அவர் நம்முடைய கொள்கைகளுக்கு எதிரானவர். இருந்தாலும் அவரும் மதுவிலக்கை ஆதரித்தவர். எனவே மதுவிலக்கை ஆதரித்தவர்களின் அனைவருடைய ஆசியும் நமக்கு வேண்டும். அதனால் அவருடைய திரைப்படத்தில் பேனராக வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

என்னதான் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் விளக்கம் அளித்திருந்தாலும் அவருடைய இந்த செயல் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. நெட்டிசன்கள் பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன்கள் பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் கூட மதுவிலக்கை ஆதரித்தவர்கள் தான். அதற்காக அவர்களின் புகைப்படங்களை மாநாட்டில் வைப்பீர்களா? என்றும் குஜராத்தில் மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். அதனால் பிரதமர் மோடி அவர்களின் உருவப்படத்தை மாநாட்டில் பயன்படுத்துவீர்களாக? என்றும் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.