இது தமிழ் சினிமாவின் பொற்காலம்… VTK வெற்றி விழாவில் சிம்பு பேச்சு!

0
150

இது தமிழ் சினிமாவின் பொற்காலம்… VTK வெற்றி விழாவில் சிம்பு பேச்சு!

சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருந்தார் . ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் என்பதால் அடுத்து ரிலீஸ் ஆன இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் வியாபாரமும் மிகப்பெரிய அளவில் நடந்தது. ஆனால் திரையரங்கில் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மூலமாகவே இந்த படத்துக்கு நல்ல லாபம் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் 50 ஆவது நாளை ஒட்டி சென்னையில் வெற்றி விழா நடந்தது. அதில் படத்தின் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது பேசிய சிம்பு “இது தமிழ் சினிமாவின் பொற்காலம். பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற படங்கள் முதல் லவ் டுடே வரை அனைத்து விதமான படங்களையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கியுள்ளனர்” எனப் பேசினார்.