தொகுப்பாளினியிடம் புடவையை தூக்கி கட்டுமாறு கூறிய விடிவி கணேஷ்!! சங்கடத்தில் ஆழ்ந்த பெண்!!

0
107
VTV Ganesh asked the host to tie her saree!! A woman in deep embarrassment!!

கணேஷ் ஜனார்த்தனன் என்ற பெயரைக் கொண்ட வி டிவி கணேஷ் அவர்கள் பெரும்பாலும் நடிகர் சிம்புவுடன் இணைந்த நடித்ததில் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் இவர் நடித்த பிறகு இவருக்கு விடிவி கணேஷ் என்று அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கும் அனிமேஷன் திரைப்படமான முபாஷா படத்திற்கு இவர் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக , இவருடன் இணைந்து நாசர், சிங்கம் புலி, ரோபோ சங்கர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ் போன்றவர்களும் பின்னணி பேசியுள்ளனர்.

நேற்று இந்த திரைப்படத்திற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்ட கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இதில் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி ஏஞ்சலின். இவர் யூட்யூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து அதன் மூலம் பிரபலமானவர். திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய கருத்துக்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அவ்வாறாக, விடிவி கணேஷ் அவர்களும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின் தொகுப்பாளினி ஏஞ்சலன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரைப் பார்த்து, ” புடவையை கொஞ்சம் தூக்கி கட்டுமா கால் தவறி கீழே விழுந்திட போற, பார்க்க கஷ்டமா இருக்கு ” என்று கூறியுள்ளார். இது தொகுப்பாளினியை சங்கடம் அடைய செய்தது எனினும் அவர் அதனை சிரித்துக் கொண்டே சமாளித்திருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும்போது மேடை நாகரீகமானது கடைபிடிக்க வேண்டும். அதுவும் திரை பிரபலங்கள் என்று வரும் பொழுது அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதனை பலரும் கண்டுகொள்வதில்லை என்பதை உண்மை. இதற்கு எடுத்துக்காட்டாக விடிவி கணேஷ் அவர்களின் செயலானது உள்ளது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.