திமுகவின் மாபெரும் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காத்திருக்கும் அதிமுக!

0
142

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக மற்றும் திமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு கட்சிகள் சார்பாக நடத்தப்படும் அந்த மாநாடு அந்த கட்சிக்கு தேர்தல்களில் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அந்தவிதத்தில் திருச்சியில் திமுக நடத்தவிருக்கும் மாநாடு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த செயலாக பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாதம் 14ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு போன்ற விஷயங்கள் தொடர்பாக பேசி ஒரு நல்ல முடிவை எடுத்துவிட்டு ஸ்டாலின் அந்த மாநாட்டில் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் தேர்தல் தேதி என்பது அந்த மாநாட்டிற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் விதிகளை காரணம் காட்டி பிரச்சனையை ஏற்படுத்த ஆளும் கட்சியான அதிமுக தயாராகி வருகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே திமுக தன்னுடைய மாநாட்டிற்கு ஏற்படும் செலவுகளை முடித்துவிட்டால் தேர்தல் விதி மீறலில் எந்த ஒரு சிக்கலும் வராது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தலுக்கும் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.