Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய் இல்லாமல் இருக்க கண்டிப்பாக நடை பயிற்சி செய்யுங்கள்! நடை பயிற்சியின் பலன்கள்!

எளிமையான வாழ்க்கையை தேடி அனைவரும் அலைந்து கொண்டு இருக்கிறோம். இதனால் உடல் உழைப்பை மறந்து விட்டு மூளை உழைப்பை செய்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தம் மன உளைச்சல் தான் அதிகம். நம்மை அறியாமலே பல நோய்களை நாம் ஏற்படுத்தி கொள்கிறோம்.

சீரான உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு எனப்படும் சக்கரை நோய், மன அழுத்தம் எனப்படும் BB நோய், உடல் எடை அதிகரித்தல், மன நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தினமும் உணவோடு மருந்துகளையும் எடுத்து வருகிறோம்.

உடல் உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். காலை மாலை கண்டிப்பாக நடை பயிற்சி செய்ய வேண்டும். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1) காலையில் நடை பயணம் மேற்கொள்வதால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும்.

2) காலையில் நடை பயணம் மேற்கொண்டால் அதிக உடல் எடை கொண்டவர்கள் உடல் எடை குறைக்கலாம்.

3) தசைகள் வலுவடையும், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

4) காலையில் நடை பயணம் மேற்கொண்டால் இரத்த ஓட்டம் சீராகும். இரத்த நாளங்கள் சிறப்பாக செயல் படும்.

5) சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை மாலை என இருவேளையும் 45 நிமிடம் நடை பயணம் மேற்கொண்டால் சக்கரை கட்டுக்குள் வரும். சக்கரை நோய் பாதிக்க படுபர்கள் முன்கூட்டியே சக்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

6) சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கப்படும்.

7) செரிமானத்தை நன்கு தூண்டும்.

8) கெட்ட கொழுப்பு கரையும், வயிற்றில் செரிமானத்தை தூண்டும் அமிலம் சுரக்கப்படும்.

9) இதயம் சுறுசுறுப்பாக இயங்கும். இதய நோய் வராமல் தடுக்கப்படும்.

10) நியாபக சக்தி அதிகரிக்கும். அசதியை போக்கும். உடல் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version