Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!!

Want a subsidized house with all amenities? Full Details about Eligibility and Documents Inside!!

Want a subsidized house with all amenities? Full Details about Eligibility and Documents Inside!!

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!!

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மானியத்தில் வீடு வழங்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்ற முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாத நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீடு கட்டி தரவேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு கீழ் மற்றும் ரூ.6,00,000க்குள் இருப்பவர்களுக்கு 6.5% மானியத்துடன் ரூ.6,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.அதேபோல் ரூ.6,00,000 முதல் ரூ.12,00,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.9,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.இதற்கு 4% மானியம் வழங்கப்படுகிறது.கட்டப்படும் வீட்டின் அளவை பொறுத்து மானியத் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் பெற்ற கடனை அடுத்த 20 வருடங்களுக்குள் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது.கழிப்பறை வசதி,மின்சார வசதி,குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் வீட்டு கட்டித்தரப்படுகிறது.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.இதனால் இத்திட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பிக்க தொடங்கியிருக்கின்றனர்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:

1)இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2)இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதி 18 ஆகும்.

3)ஆண்டு வருமானம் ரூ.18,00,000க்கு கீழ் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

4)விண்ணப்பதாரருக்கு சொந்த வீடு இருக்க கூடாது.

5)விண்ணப்பத்தாரர் அரசுப்பணியாளராக இருக்க கூடாது.அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அரசுப்பணியாளராக இருக்க கூடாது.

இத்திட்டத்திற்கு தகுதி பெறும் பயனருக்கு முதல் தவணையாக ரூ.50,000 வழங்கப்படும்.பின்னர்
இரண்டாவது தவணையாக ரூ.1,50,000 மற்றும் இறுதி தவணையாக ரூ.50,00 வழங்கப்படும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:

1)ஆதார் அட்டை
2)பான் அட்டை
3)முகவரி சான்று(ரேசன் கார்டு)
4)வருமான சான்றிதழ்

இத்திட்டத்தில் பயன்பெற PMAY – https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version