இன்று ஆண்,பெண் அனைவரும் பாரபட்சம் இன்றி சந்திக்கும் ஒரு பாதிப்பாக கண் கருவளையம் உள்ளது.கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால் அவை நம் அழகை முழுமையாக கெடுத்துவிடும்.
அது மட்டுமின்றி நம் முகம் மற்றும் கண்கள் களையிழந்து போய்விடும்.இந்த கருவளையத்தை கெமிக்கல் பொருட்கள் இன்றி இயற்கையாக மறைய வைப்பது எப்படி என்று நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.
கருவளையம் உருவாக காரணங்கள்:-
**தூக்கமின்மை
**மன அழுத்தம்
**உடல் சோர்வு
**ஊட்டச்சத்து குறைபாடு
தேவையான பொருட்கள்:-
1)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி
2)காட்டன் பஞ்சு – ஒன்று
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.ரோஸ் வாட்டர் இல்லாதவர்கள் பன்னீர் ரோஜா இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.ரோஜா இதழ் நிறம் மற்றும் வாசனை தண்ணீரில் இறங்கும் வரை குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
3.பிறகு இதை ஆறவைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு காட்டன் பஞ்சை எடுத்து ரோஸ் வாட்டரில் முக்கி எடுத்து கண்களை சுற்றி தேய்க்க வேண்டும்.
4.இப்படி ஐந்து நிமிடங்கள் வரை செய்த பிறகு சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.பிறகு குளிர்ச்சியான நீரில் கண்களை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
5.ரோஸ் வாட்டரை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தினாலே கருவளையம் மறைந்துவிடும்.
கருவளையத்தை போக்கும் மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)காய்ச்சாத பசும் பால் – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
2.பிறகு காய்ச்சாத பால் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
3.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் போட்டு டிப் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை கண் கருவளையம் சுற்றி அப்ளை செய்து கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.