அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!
இன்றைய காலங்களில் நிறைய பேர் பல் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். பற்சொத்தை, பற்சிதைவு, பற்களில் புழு வருதல், மஞ்சள் பற்கள் என பல் சம்மந்தமான பிரச்சனைகள் நிறைய உள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நம் சாப்பிட்ட உணவு பல் இடுக்குகளில் சிக்கி பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இவை உறுதியான பற்களை பலவீனமாக்குகிறது.
இதனால் சொத்தைப்பல் உருவாகி பற்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சொத்தை பல்லை எடுக்காமல் இந்த முறையை பின்பற்றி பல் இடுக்குகளில் உள்ள புழுக்களை அகற்றி உங்கள் பற்களை உறுதியாக ஆரோக்கியமாக மாற்றுகிறது.
*#* இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் கொய்யா இலைகள். கொய்யா இலைகளை பறித்து சுத்தம் செய்து துண்டுகளாக உரலில் இட்டு பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். இதை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் போட்டு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு பவுலில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
** இதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும். பிறகு சுத்தமான ஒரு பஞ்சினை எடுத்து அதை சிறிதாக எடுத்துக்கொண்டு பௌலில் உள்ள கொய்யா இலை சாற்றில் நனைத்து நமக்கு சொத்தைப்பல் எந்த இடத்தில் உள்ளது அந்த இடத்தில் வைத்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
** நாம் இதை வைத்திருக்கும் சமயத்தில் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள கூடாது.
** இது சொத்தை பல்லில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கும். அல்லது பற்களில் உள்ள புழுக்களை வெளியேற்றும் அல்லது புழுக்கள் இறந்துவிடும். அரை மணி நேரம் கழிந்ததும் அந்த பஞ்சினை எடுத்து விட்டு வாயை சுத்தமான நீரால் நன்கு கொப்பளிக்கவும்.
** கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பாக இந்த முறையை பயன்படுத்த வேண்டாம்.