வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் இலவசமாக பான் கார்டு அப்ளை செய்ய வேண்டுமா? அப்போ இந்த 7 ஸ்டெப் பாலோ பண்ணுங்க போதும்!!
நம் நாட்டில் முக்கிய நேரடி வரியாக வருமான வரி இருக்கிறது.இந்த வரியை செலுத்த பான் கார்டு தேவைப்படுகிறது.18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன்கள் அனைவரும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
பான் கார்டு வரி செலுத்த,டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள,வங்கி கடன் பெற,சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அது மட்டுமின்றி சொத்துக்கள் வாங்க விற்க பான் கார்டு அவசியமாகும்.
பான் கார்டில் தங்கள் பெயர்,பிறந்த தேதி உடன் பத்து இலக்க குறியீடு பதியப்பட்டிருக்கும்.தற்பொழுது 18 நிரம்பாதவர்களுக்கும் பான் அட்டை வழங்கப்படுகிறது.முக்கிய ஆவணமாக திகழும் பான் கார்டை வீட்டில் இருந்தபடி அப்ளை செய்து பெறுவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 01:
முதலில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ e-Filing போர்டல் இணைய தள பக்கத்தை அணுக வேண்டும்.
ஸ்டெப் 02:
இணைய தள பக்கத்திற்குள் நுழைந்தால் “Instant e-PAN” என்ற ஆப்ஷன் தோன்றும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 03:
“Instant e-PAN” ஆப்ஷனுக்குள் நுழைந்ததும் ‘Get New-e pan’ என்ற ஆப்ஷன் தோன்றும்.அதை கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.அதன் பின்னர் “Continue” என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 04:
பின்னர் ‘I have read the consent terms and agree to proceed further’ என்பதை கிளிக் செய்து “Continue” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 05:
பிறகு ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.அந்த எண்ணை பதிவிட்டு Continue என்பதை கொடுக்கவும்.
ஸ்டெப் 06:
பிறகு தாங்கள் கொடுத்த ஆதார் தகவல்களை சரிபார்த்து ‘I Accept’ என்பதை கிளிக் செய்து Continue என்பதை கொடுக்கவும்.
ஸ்டெப் 07:
பிறகு உங்கள் ஆதார் கார்டில் பதிவாகி இருக்கின்ற மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்ட்டும்.அதனோடு ட்ராக்கிங் எண் அனுப்பப்படும்.இதை பயன்படுத்தி தங்கள் பான் கார்டு ஸ்டேட்டஸை எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.