தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! 

0
170
Want to boost hair growth? So use ginger like this!
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க!
நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி சமையலுக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இஞ்சி சிறப்பான மருந்துப் பொருளாகவும் பயன்படுகின்றது. இஞ்சியை பேஸ்ட் போல அரைத்து அதை நீரில் கலந்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி நீங்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆஸ்துமா பிரச்சனையை இஞ்சி சரி செய்யும். இதே போல பல பிரச்சனைகளுக்கு இஞ்சி தீர்வாக அமைகின்றது. இந்த இஞ்சியை தலைமுடி வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* இஞ்சி
* தேங்காய் எண்ணெய்
செய்முறை:
முதலில் இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த இஞ்சியை நன்கு அரைத்துக் கொண்டு அதிலிருந்து சாறு மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை காலை நேரத்தில் உச்சந்தலையில் தேய்த்து கொள்ள வேண்டும். தலைமுடி முழுவதும் படும்படி தேய்த்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 30 முதல் 1 மணி நேரம் தவறவிட்டு பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன். கிடைக்கும்.