இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை சாப்பிடுங்க
இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் தேங்காய் அதிகமாக சாப்பிடலாம். தேங்காயில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தேங்காய் இல்லாமல் சமையல் இருக்காது. தேங்காயில் பலவிதமான பொருட்கள் உள்ளது.
தேங்காயை நாம் அதிகமாக சட்னி அரைத்து சாப்பிடுவது வழக்கம். மேலும் தேங்காய் பர்பி, தேங்காய் மிட்டாய், தேங்காய் சாப்பாடு என்று பலவிதங்களில் தேங்காயை நாம் சாப்பிடலாம். அவ்வாறு சமையல் செய்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும். அவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* தேங்காயை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தேங்காயில் லாரிக் போன்ற காலங்களில் கவலைகள் உள்ளது. இவை இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றது.
* உடல் எடையை மேலாண்மை செய்வதற்கு தேங்காய் பெரிதும் உதவி செய்கின்றது. தேங்காயில் கொழுப்புச் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காயை பச்சையாக சாப்பிடலாம். மேலும் தேங்காய் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
* தேங்காயை பச்சையாக சாப்பிடும் பொழுது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
* தேங்காயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.
* தேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் செரிமான கோளாறு உள்ளவர்கள் தேங்காயை சாப்பிடலாம். இதனால் செரிமான கோளாறு சரியாகும். மேலும் செரிமான மண்டலம் பலம் பெறும்.
* தேங்காயை பச்சையாக சாப்பிடும் பொழுது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறுகின்றது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
* தேங்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அல்சைமர் அபாயத்தை குறைக்கலாம்.
* தேங்காயை நாம் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை நாம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தவும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம்.