நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!
நம் உடலில் நோய்கள் எப்பொழுது தொற்றிக் கொள்கின்றது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பொழுது மட்டும் தான். நோய்கள் நமக்கு ஏற்பட்ட பிறகு நாம் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு பதிலாக வருமுன் காப்பதே சிறந்த முறையாகும்.
அதாவது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான உணவு வகைகளை நாம் சாப்பிட வேண்டும். அவ்வாறு நாம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் எந்தவித நோய்களும் நம்மை தொற்றாது. இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்…
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் உலர் பழங்களை சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகைகளையும் நாம் சாப்பிடலாம். இதில் புரதங்கள் அதிக அளவில் இருக்கின்றது.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் ப்ரோக்கோலியை சாப்பிடலாம். ப்ரோக்கோலியில் வைட்டமின்களும், தாதுக்களும் இருக்கின்றது.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் சீதா பழத்தை சாப்பிடலாம்.
* நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் பப்பாளி பழங்களை சாப்பிடலாம். பப்பாளி பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது.
* வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நாம் சாப்பிடலாம். இந்த கீரை வகைகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.
* ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவேன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் நம்முடைய உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.