மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா… இதற்கான சில வழிமுறைகள் இதோ… 

0
86

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா… இதற்கான சில வழிமுறைகள் இதோ…

 

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

 

கணிப்பொறிக்கு சிபியு எவ்வாறு கட்டுப்பாடுகளை கொடுத்து செயல்பட உதவியாக இருக்கின்றதோ அது போலவே நம் உடலில் உள்ள ஒவ்வொரு அசைவையும் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையையும் செய்ய வைப்பதில் மூளை மையக்கருவியாக இருக்கின்றது.

 

என்னதான் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை உண்டாலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாம்.

 

மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்…

 

* நாம் தினமும் தவறாமல் உடல்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி என்பது உடலை வளர்ப்பதற்காக செய்வது மட்டுமல்ல. உடற்பயிற்சியின் மூலமாக மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். வயதுக்கு தகுந்தது போல குறையும் மூளையின் முக்கிய இணைப்புகளை புதுப்பிக்க உடற்பயிற்சி உதவி செய்கின்றது. உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மூளையின் தசைகளை வளர்க்க முடியும். அதனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 

* மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் நன்றாக தூங்கலாம். உறங்கும் பொழுது மூளையானது தொல்லை தரும் புரதங்களை அழித்து நினைவுகளை வலுப்படுத்தி தருகின்றது. இது நமக்கு டர்போ சார்ஜ் செய்யப்பட்ட நினைவுகளையும் உச்ச மூளை செயல்திறனையும் தருகின்றது. எனவே மூளை சூப்பர் ஹீரோ போல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.

 

* மூளைக்கு ஊட்டமளிக்கும் உணவு வகைகளை உண்ண வேண்டும். காய்கறிகள், தானியங்கள், சதைப்பற்றுள்ள மீன்கள், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை உண்ணலாம். இதனால் மூளை ஆரோக்கியாமக இருப்பதுடன் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இவ்வாறு மூளைக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் அல்சைமர் நோய் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

 

* மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கக்கூடிய புதிர்கள், விளையாட்டுகள், கதைகள் போன்றவற்றை படிக்கவும் விளையாடவும் வேண்டும். இதனால் மூளை சுறுசுறுப்பு அடையும். மேலும் மனதளவில் சுறுசுறுப்பு ஏற்படும்.

 

* மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தனிமையில் இருப்பதை விட சமூகத்துடன் இணைந்து இருக்க வேண்டும். மனதிற்கு அன்புக்குரியவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவ்வாறு அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் குறைகின்றது. மேலும் மூளை சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் அடைகின்றது.

 

* உடல் ஆரோக்கியத்தையும் நாம் சரிவர பார்த்துக் கொள்வதும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது. ஆரோக்கியமான தமனிகள், நரம்புகள் ஆகியவை இதயத்தை மட்டுமில்லாமல் மூளையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது. நமது உடலின் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு ஆகியவற்றை தவறாமல் சரிபார்த்து சமநிலையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சமநிலையில் வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். இதனால் மூளையும் ஆரோக்கியம் அடையும்.