Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்!

#image_title

சிறுநீரக கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான முழு விவரங்கள்!

பொதுவாக வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பூ, வாழைக்காய் ,வாழைப்பழம், வாழைத்தண்டு போன்றவைகள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது உள்ளது. அந்த வகையில் மிகவும் முக்கியமானது வாழைத்தண்டு

இந்த வாழைத்தண்டில் அதிகப்படியான விட்டமின் சி, பொட்டாசியம், அயன், கார்போஹைட்ரேட் ,காப்பர், வைட்டமின்கள் மற்றும் ஏராளமான தாது சத்துக்களும் நிறைந்துள்ளது.

மேலும் வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை விட அதிக மருத்துவம் நிறைந்து காணப்படுவது இந்த வாழைத்தண்டு நாம் இவ்வளவு மருத்துவ குணம் உள்ள இந்த வாழைத்தண்டை நாம் அன்றாடம் உணவில் சேர்ப்பதனால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது. என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வாழைத்தண்டு என சொன்னால் நம் நினைவிற்கு வருவது முதலில் சிறுநீரக கற்களை கரைப்பவல்லது.இந்த வாழைத்தண்டுக்கு இயல்பாகவே அதிக சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.இதன் காரணமாக சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை எளிதில் அகற்றுவது.

இந்த சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் வாழைத்தண்டுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பருகி வர கால்சியம் கிரிஸ்டல் போன்ற கற்கள் வராமலும் தடுக்க கூடியது.மேலும் இந்த வாழைத்தண்டானது சிறுநீரகங்களில் உள்ள கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுகிறது.

இதன் மூலமாக யுக்கியேன் என சொல்லக்கூடிய ட்ராக் இன்ஃபெக்சன் போன்ற பிரச்சனைகள் வராமல் எளிதில் தடுக்கும்.அது மட்டும் இன்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

இந்த வாழைத்தண்டில் இருக்கக்கூடிய துவர்ப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.இது லோ கிளைஸ்மிக் இண்டஸ் கொண்ட உணவு கூட மேலும் இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் இருப்பதினால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Exit mobile version