கிட்னியில் உள்ள கற்களை உடனடியாக கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க! 

0
208
Want to dissolve kidney stones immediately? Then do this!
கிட்னியில் உள்ள கற்களை உடனடியாக கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!
நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதாவது காது, கண், மூக்கு போன்ற கண்களுக்கு தெரியக்கூடிய உறுப்புகளை வெளி உறுப்புகள் என்றும் இதயம், நுரையீரல், குடல் போன்று நம்முடைய கண்களால் பார்க்க இயலாத உறுப்புகளை உள் உறுப்புகள் என்றும் கூறுவார்கள்.
இதில் கிட்னி என்று அழைக்கப்படும் சிறுநீரகம் உடலில் உள்ள உள் உறுப்பு ஆகும். இந்த சிறுநீரகம் என்ற கிட்னியில் கற்கள் ஏற்படுவது பெரிய பிரச்சனையை உண்டாக்கும். அதாவது நாம் ஒழுங்காக சிறுநீர் கழிக்காமல் இருக்கும் பொழுது உடலில் சிறுநீர் தேங்குவதன் மூலமாக கிட்னியில் கற்கள் உருவாகின்றது. மேலும் சிறுநீரகத்தில் அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்துக்கள் அல்லது யூரிக் அமிலம் தேங்கும் பொழுது கற்கள் உருவாகின்றது.
இந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளது. இயற்கையான முறையில் சிறுநீரக கற்களை எவ்வாறு கரைத்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நாவல் பழத்தின் விதைகள்
* தயிர்
நம்முடைய சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை நாவல் பழத்தின் விதைகளை மட்டும் வைத்து கரைத்து வெளியேற்றலாம். நாவல் பழத்தில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. அதே போல நாவல் பழத்தின் விதைகள் பல விதமான நோய்களையும் விரட்டக் கூடிய மருத்துவ குணம் கொண்டது. தற்பொழுது சிறுநீரகத்தில் உள்ள கற்களை நாவல் பழத்தின் விதைகளை வைத்து எவ்வாறு கரைத்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
செய்முறை…
முதலில் நாவல் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். வெயில் நன்றாக காய்ந்த பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுலில் தயிர் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள நாவல் பழ விதைகளின் பொடியை தயிரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்துவிட்டு சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறி விடும்.