வெள்ளை முடியை எளிமையாக கறுப்பாக மாற்ற வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்! 

0
197
Want to easily turn white hair black? Just these two ingredients are enough!
வெள்ளை முடியை எளிமையாக கறுப்பாக மாற்ற வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்!
ஒரு சிலருக்கு தலைமுடி வெள்ளையாக இருக்கும். அவர்கள் அனைவரும் வெள்ளை முடியை கறுப்பாக மாற்றுவதற்கு ஹேர்டை பயன்படுத்துவார்கள். அவ்வாறு ஹேர்டை பயன்படுத்தும் பொழுது தலைமுடி உடனடியாக கறுப்பாக மாறும். ஆனால் நாளடைவில் தலைமுடியானது கறுப்பாக இல்லாமல் செம்பட்டை வண்ணத்தில் மாறிவிடும்.
செம்பட்டையாக மாறிய தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு மீண்டும் ஹேர்டை பயன்படுத்த வேண்டும். தற்பொழுது இந்த பதிவில் இயற்கையாகவே வெறும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து எவ்வாறு நரைமுடியை கறுப்பாக மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* கிராம்பு – 6
* தேயிலைத்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 6 கிராம்பை தட்டி தூளாக அரைத்து அந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
இது நன்றாக குதித்து வரும் பொழுது தேயிலைத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் இந்த தண்ணீரை நன்றாக ஆற வைக்க வேண்டும். இதோ நரைமுடியை கருப்பாக மாற்றும் மருந்து தயார்.
இதை வடிகட்டிய பின்னர் இந்த தண்ணீரை தலையின் வேர்காலில் படும் மாதிரி தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வெள்ளை முடி கருப்பாக மாறும்.