Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

#image_title

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.

சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை போன்ற உயிர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.

ஜாதப்படி உங்களுக்கு செவ்வாய் கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் ஆடுகளுக்கு உணவு வழங்க வேண்டும்.செவ்வாய் கிரகம் இருக்கும் பொழுது திருமண தடை ஏற்படும்.ஆடுகளுக்கு உணவு அளிப்பதால் செவ்வாயால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் அகலும்.

உங்கள் ஜாதகப்படி புதன் கிரகம் நடக்கிறது என்றால் கிளிகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.

ஜாதகப்படி உங்களுக்கு சுக்கிரன் திசை ஏற்பட்டு இருக்கிறது என்றால் நீங்கள் புறாவிற்கு உணவு அளிக்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் சனி உள்ளது என்றால் காகத்திற்கு உணவு அளிக்க வேண்டும்.

நாய்களுக்கு உணவு அளிப்பதால் ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பித்து விடலாம்.

Exit mobile version