மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

0
348

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம்.

மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும்.

இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் பண்புகளை பூண்டில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினசரி நம் சமையலுக்கு இதனை உபயோகப்படுத்துகிறோம். பூண்டில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி1, விட்டமின் பி2, கால்சியம்,அயன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

வரட்டு இருமலை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மிளகின் காரத்தன்மை ஆனது தொண்டைப் பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நெஞ்சில் கரைத்து வறட்டு இருமல் வராதவாறு பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மிளகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை உள்ளது.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக மார்புச் சளி,இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவை உண்டாக்குகிறது இதனை குணப்படுத்தும் சத்துகள் கிராம்பில் அதிகமாக நிறைந்துள்ளது. இதிலுள்ள அயன், கால்சியம் மற்றும் விட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மார்புச்சளி இருமல் தொண்டை கரகரப்பு ஆகியவற்ற குணப்படுத்தும் செய்முறைகளை காணலாம். 500 மிலி நீரில் இரண்டு வெள்ளை பூண்டு, நான்கு மிளகு, இரண்டு கிராம்பு, சிறிதளவு தோல் நீக்கிய இஞ்சி துண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள் ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு வடிகட்டி தினசரி காலையில் பருகி வருவதன் காரணமாக மார்பு சளி, வரட்டு இருமல் ஆகியவை முற்றிலும் குணமடையும்.