பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் முடி வளர்வதை விரும்புவதில்லை.இது உடல் அழகை கெடுப்பதோடு துர்நாற்றத்திற்கு வழிவகுப்பதாக எண்ணுகின்றனர்.இதனால் அக்குள் மற்றும் யோனி பகுதியில் உள்ள முடிகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை பின்பற்றுங்கள்.
டிப்ஸ் 1:
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை – ஒன்று
2)தேன் – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.
அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அக்குள் பகுதியில் தடவுங்கள்.நன்றாக உலர்ந்த பின்னரே அக்குள் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த வீட்டு வைத்தியத்தை தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செய்து வந்தால் அக்குள் முடி முழுமையாக நீங்கும்.
டிப்ஸ் 2:
தேவையான பொருட்கள்:
1)காய்ச்சாத பால் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
3)பன்னீர் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
கிண்ணம் ஒன்றில் காய்ச்சாத பசும் பால் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து கலந்து விடுங்கள்.
அடுத்து ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்து நன்கு கலந்து அக்குள் பகுதியில் தடவி ஒரு மணி நேரம் உலரவிட்டு வாஷ் செய்யுங்கள்.இப்படி தினமும் செய்து வந்தால் அக்குள் பகுதியில் உள்ள முடி முழுவதும் நீங்கிவிடும்.
டிப்ஸ் 3:
தேவையான பொருட்கள்:
1)பப்பாளி – ஒரு கீற்று
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)பன்னீர் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பப்பாளி கீற்றை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து அரைத்து அக்குள் பகுதியில் தடவி உலர வைத்து வாஷ் செய்தால் அக்குள் முடி உதிர்ந்துவிடும்.