உடலில் உள்ள அரிப்பு குணமாக வேண்டுமா? கீழாநெல்லியின் இலைகளை இப்படி பயன்படுத்துங்க! 

0
146
Want to get rid of body itchiness? Use the leaves of Keezhanelli like this!
உடலில் உள்ள அரிப்பு குணமாக வேண்டுமா? கீழாநெல்லியின் இலைகளை இப்படி பயன்படுத்துங்க!
உடலில் ஏற்படும் தோல் அரிப்பை சரி செய்வதற்கு கீழாநெல்லி செடியின் இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கீழாநெல்லி செடி மூலிகை செடி என்று அழைக்கப்படுகிறது. கீழாநெல்லி செடியின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தது. கீழாநெல்லி செடியின் வேர் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த பயன்படுகின்றது.
கீழாநெல்லி செடியின்இலைகளில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இதை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் பசி உண்டாகும். உடல்சூடு குறையவும் கீழாநெல்லியை மருந்த்க பயன்படுத்தலாம். விஷக் கிருமிகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை சரி செய்ய கீழாநெல்லியை மருந்தாக பயன்படுத்தலாம். கீழாநெல்லி செடி வயிற்றுப் புண்களை சரி செய்யவும் பயன்படுகின்றது. அடுத்ததாக கீழாநெல்லியை தோல் அரிப்பு நோய் வராமல் தடுக்க எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தோல் அரிப்பு நோய் ஏற்படாமல் இருக்க கீழாநெல்லி இலைகளை பயன்படுத்தும் முறை…
கீழாநெல்லி செடியின் இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை எடுத்து உடலில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் கழிந்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தோல் அரிப்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அதே போல தோல் அரிப்பை நோய் இருந்தாலும் அது குணமாகிவிடும்.