உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
73
#image_title

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் கெடும் நிலை ஏற்பட்டு விடும்.

மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்:-

*தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமை

*எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல்

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு உண்ணுதல்

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

மலச்சிக்கல் பாதிப்பைஇயற்கை முறையில் சரி செய்வது எப்படி?

இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இவை மலச்சிக்கல், சளி, இருமல், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி- ஏஜிங் உள்ளிட்டவை நிறைந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.

அதுபோல் எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி என்று பல சத்துக்களை எலுமிச்சை பழம் உள்ளடக்கி வைத்துள்ளது.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள்

*எலுமிச்சை

*தேன்

*பட்டை தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அடுப்பை அணைத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் 1 சிட்டிகை அளவு பட்டை தூள் சேர்த்து கலந்து பருகவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.