Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

#image_title

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது.

பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். அந்த வகையில் அதிக காரம் கொண்ட பச்சை மிளகாயும் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.

நம்முடைய வீட்டில் சமையலுக்கு கறிவேப்பிலை இன்றியமையாத ஒரு பொருள். அதில் சத்துக்கள் அதிகம். ஆனால் நாம் சாப்பிடும் பொழுது அதை ஒதுக்கி வைத்துவிடுவோம். அதே போல பச்சை மிளகாயும் பல சத்துக்கள் கொண்ட பொருள்தான். ஆனால் அதையுமே காரம் அதிகமாக உள்ளது என்று சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைத்து விடுவோம்.

இந்த பச்சை மிளகாய் பல சத்துக்கள் ஒளிந்துள்ளது. காரம் அதிகமாக இருந்தாலும் இதை சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது. இந்த பச்சை மிளகாயை நாம் சமையலில் சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு உடலில் பலவிதமான நோய்கள் குணமடைகின்றது.

பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்…

* நாம் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு சளி இருமல் தொந்தரவு குணமாகும். பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இது சளியின் வீரியத்தை குறைத்து சுவாசப் பாதையை சுத்தப்படுத்தி சீராக்க உதவுகின்றது. மேலும் பச்சை மிளகாயில் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளது. இது சுவாசப் பாதையை தளர்த்த உதவுகின்றது.

* காயங்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிடலாம். வெட்டுக்காயங்கள் போன்ற பலவிதமான காயங்களை விரைவில் குணப்படுத்த வேண்டும் என்றால் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிடலாம்.

* பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக் கொண்டால் நமது உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தும் குணமாகும்.

* பச்சை மிளகாயை சமையலில் சேர்த்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய மனநிலையும் மேம்படும்.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டும் என்றால் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிடலாம்.

* நெஞ்செரிச்சல் தொடர்பாக ஏற்படும் வலியை குணப்படுத்தவும் பச்சை மிளகாய் பயன்படும்.

என்னதான் மருத்துவ குணங்கள் அதிகமாக இருந்தாலும் பச்சை மிளகாயை அதிகம் நாம் சாப்பிடக்கூடாது.

Exit mobile version