உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

0
177
#image_title

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

நம்மில் பலரின் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற முடியும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*தேன் – 1 தேக்கரண்டி

*பன்னீர்(ரோஸ் வாட்டர்) – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கொள்ளவும்.அடுத்து 1 தேக்கரண்டி அளவு பன்னீர்(ரோஸ் வாட்டர்) சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் இதை உதடுகளின் மேல் தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் வரை விட்டு உதடுகளை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தவும்.இவ்வாறு தொடர்ந்து செய்த் வருவதன் மூலம் கருமை உதடு பிங்க் நிறத்திற்கு மாறும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*பாதம் பருப்பு – 3

*சுத்தமான பால் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 3 பாதம் பருப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.பின்னர் அவை நன்கு ஊறி வந்ததும் அதன் தோலை மட்டும் நீக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி அளவு ஊற்றி குழைத்துக் கொள்ளவும்.இதை உதடுகளின் மேல் தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் வரை விட்டு உதடுகளை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தவும்.இவ்வாறு தொடர்ந்து செய்த் வருவதன் மூலம் கருமை உதடு பிங்க் நிறத்திற்கு மாறும்.