Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கழுத்து கருமையை போக்க வேண்டுமா!!? இதோ சில எளிமையான இயற்கையான டிப்ஸ்!!! 

#image_title

கழுத்து கருமையை போக்க வேண்டுமா!!? இதோ சில எளிமையான இயற்கையான டிப்ஸ்!!!
நமது கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சில இயற்கையான அதே சமயம் எளாமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ் பயன்படுத்தி கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்கி விடலாம்.
கழுத்துப் பகுதியில் உள்ள கருமை என்பது உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும். மேலும் நகைகள் நீண்ட நாட்கள் அணிவதால் ஏற்படுகின்றது. மேலும் உடலில் சத்துக் குறைபாடு இருந்தாலும் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படும்.
இந்த கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை சரி செய்ய என்னதான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் இதை போக்க இயற்கையான வழிமுறைகள் தான் நல்லதொரு தீர்வைத் தரும். எனவே இந்த பதிவில் அடுத்து கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க உதவும் சில டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்க சில இயற்கையான வழிமுறைகள்…
* கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே கற்றாழை ஜெல்லை எடுத்து கழுத்துப் பகுதியில் கருமையாக உள்ள இடங்களில் தேய்த்து வரலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.
* எலுமிச்சம் பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து அதை கழுத்துப் பகுதியில் தேய்த்து வருவதன் மூலமாகவும் இந்த கழுத்து கருமையை நீக்கலாம்.
* தேன் சருமத்திற்கு பல நன்மைகளை செய்யும். எனவே இரவு நேரத்தில் தேனை எடுத்து கழுத்துப் பகுதியில் தேய்த்து மறுநாள் காலையில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* சருமத்திற்கு பலன் அளிக்கக் கூடிய பொருட்களில் தக்காளியும் ஒன்று. இந்த தக்காளியின் சாறை எடுத்து இரவு நேரத்தில் கழுத்துப் பகுதியில் தேய்த்து மறுநாள் காலையில் கழுவி வருவதன். மூலம் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்கலாம்.
* ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து தண்ணீரில் கலந்து அதை கழுத்துப் பகுதியில் தேய்த்து 20 நிமிடங்கள் கழிந்து கழுவி வந்தால் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
* இளநீரை எடுத்து கழுத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் இது காய்ந்த பின்னர் இதை கழுவ வேண்டும். இது போல தொடர்ந்து செய்து வந்தாலும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை மறையும்.
* சந்தனத்தை ரோஸ் வாட்டருடன் கலந்து கழுத்தில் தேய்த்து வந்தாலும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை மறையும்.
* பப்பாளிப் பழத் தோலை கழுத்தில் தடவி வந்தாலும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை மறையாத தொடங்கும்.
Exit mobile version