கழுத்தில் உள்ள கருமையான நிறம் மறைய வேண்டுமா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்! 

0
179
Want to get rid of dark spots on neck? Here are some tips for you!
கழுத்தில் உள்ள கருமையான நிறம் மறைய வேண்டுமா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!
கழுத்தில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய இயற்கையான வழிமுறையில் சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலரை பார்த்தால் கழுத்துப் பகுதியை சுற்றி கருமையான நிறம் இருக்கும். அதை பார்க்கும் பொழுது கழுத்துப் பகுதியில் அழுக்கு படிந்து இருப்பது போல இருக்கும். ஆனால் அது அழுக்கு கிடையாது. ஒரு வித கரை போன்று. இந்த கருமையான நிறம். ஒரு சிலருக்கு உடல் பருமன் காரணமாக ஏற்படலாம். ஒரு சிலருக்கு சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படலாம். இந்த கருமையான நிறத்தை போக்க சில டிப்ஸ் பின்வருமாறு!
கழுத்தை சுற்றி உள்ள கருமையான நிறத்தை பைக்கும் எளிமையான இயற்கையான வழிமுறைகள்:
* கற்றாழையை எடுத்து அதிலிருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். இதை கழுத்துப் பகுதியில் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து 20 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையான நிறம் மாறிவிடும்.
* இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்து அதை தண்ணீரில் கலந்து கொண்டு கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். அது காய்ந்த பின்னர் விரல்களில் சிறிது ஈரம் செய்து கழுத்துப் பகுதியில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பேக்கிங் சோடா பயன்படுத்திய பின்னர் மாய்சுரைஸர் பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறையை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையான நிறம் மறையும்.
* உருளைக்கிழங்கை அறுத்து அதை தட்டி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறை பருத்தி துணி ஒன்றால் தொட்டு அதை கழுத்தில் உள்ள கருமையான நிறத்தின் மேல் அப்ளை செய்ய வேண்டும். சிறிது நேரம் கழிந்து இதை கழுவி விடலாம்.
* ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு எடுத்து அதை தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை கழுத்துப் பகுதியில் தேய்த்து 10 நிமிடம் உலர வைத்து பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவி விடலாம்.