7 நாட்களில் “பாத வெடிப்பு” குணமாக வேண்டுமா..? அப்போ இதை இரவு நேரத்தில் ட்ரை பண்ணுங்க போதும்..!!
பனி காலம் வந்து விட்டாலே ஒருசிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உணர்வு உண்டாகும். சிலருக்கு தண்ணீரில் நீண்ட நேரம் கால்களை வைத்திருப்பதால் இந்த பாத வெடிப்பு ஏற்படுகிறது.
இவை வலியை ஏற்படுத்துவதோடு நம் பாத அழகையும் கெடுத்து விடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*வேப்பிலை
*பச்சை கற்பூரம்
*மருதாணி
*மஞ்சள் தூள்
செய்முறை…
ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கைப்படி அளவு வேப்பிலை, 1 துண்டு பச்சை கற்பூரம், 1/4 கைப்பிடி அளவு மருதாணி இலை மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து ஒரு சுத்து விடவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களில் தடவி வர சில தினங்களில் பாத வெடிப்பு குணமாகிவிடும்.
பாத வெடிப்பு நீங்க வேறு சில வழிகள்:-
*தேன் மற்றும் சுண்ணாம்பை சம அளவு எடுத்து குழைத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பாத வெடிப்பு சில தினங்களில் மறையும்.
*இரவு தூங்க செல்வதற்கு முன் சிறிதளவு கடுகு எண்ணெயை பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
*எலுமிச்சை பழத் தோலை பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
*பப்பாளி பழத்தை அரைத்து பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
*இரவு தூக்கத்திற்கு முன் தேங்காய் எண்ணெய்யை பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு குறையும்.