ஒரு மாதத்தில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!
பாத வெடிப்பு பிரச்சனை ஆண்கள்,பெண்களுக்கு வருகின்ற பொதுவான பாதிப்பு தான்.இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும்.காரணம் பாத்திரம் சுத்தம் செய்வது,துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதன் காரணாமாக பாத வெடிப்புகள்,பாத எரிச்சல் உள்ளிட்டவை உண்டாக்குகிறது.இவை நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது.இந்த பாதிப்பை இயற்கை முறையில் சரி செய்வது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு
*மஞ்சள் கிழங்கு – 1
செய்முறை:-
1 கைபிடி அளவு மருதாணி இலைகளை எடுத்து ஒரு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மஞ்சள் கிழங்கு ஒன்றை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.இதையும் மருதாணி அரைத்து வைத்துள்ள பவுலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
இரவு தூங்குவதற்கு முன் பாதங்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து துடைத்து கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள மருதாணி + மஞ்சள் கலவையை வெடிப்பு இருக்கும் இடங்களில் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.
மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீர் கொண்டு கால் பாதங்களை கழுவிக் கொள்ளவும்.இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் பாத வெடிப்பு முழுமையாக மறைந்து விடும்.
மற்றொரு தீர்வு:-
முந்தின நாள் இரவு ஒரு பவுலில் 2 தேக்கரண்டி அளவு பச்சரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊற வைத்துள்ள பச்சரிசி போடவும்.அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 கொத்து வேப்பிலை மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு நன்கு அரைக்கவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.
அடுப்பு பற்றவைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள அரசி கலவையை சேர்க்கவும்.மிதமான தீயில் கைவிடாமல் கலக்கவும்.பின்னர் அவை சிவப்பு நிறத்திற்கு மாறி பேஸ்ட் பதத்திற்கு வரும்.அந்த நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஆறவிட்டு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும்.
இரவு உறக்கத்திற்கு முன் சுடு நீரில் தேவையான அளவு கல் உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதில் பாதங்களை மூழ்கும்படி 10 நிமிடம் வைக்கவும்.
பின்னர் பாதத்தை ஒரு துண்டு வைத்து சுத்தமாக துடைக்கவும்.பின்னர் பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை நன்றாக தடவவும்.இந்த பேஸ்ட் காய்ந்த பின்னர் தூங்க செல்லவும்.இப்படி தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு விரைவில் மறைந்து விடும்.