குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

0
91
#image_title

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள கிருமிகளையும் புழுக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு மருத்துவ குணம் மிக்க சில பொருள்களை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த சில பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குடல் புழுக்கள் வந்துவிட்டால் நம்மால் சரியாக சாப்பிட முடியாது. வயிறு வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த குடல் புழுக்களை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு குடல் புழுக்கள் உருவானால் அதை 6 மாதத்திற்கு ஒரு முறையாவது அளிக்க வேண்டும்.

இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இயற்கையான இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக குடல் புழுக்களை நாம் அடியோடு அழித்து விட முடியும். அந்த உணவுப் பொருள்கள் என்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

குடல் புழுக்களை அழிக்க உதவும் உணவு பொருள்கள்…

* பூண்டு குடல் புழுக்களை அழிப்பதற்கு சிறந்த ஒரு மருந்துப் பொருளாகும். இந்த பூண்டு நாம் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் உள்ள பாக்டீரியாக்களையும் ஒட்டுண்ணிகளையும் அழித்து விடுகின்றது. மேலும் குடலில் உள்ள புழுக்களை அழிக்கின்றது.

* மஞ்சள் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் எதிர்த்து போராடும் குணத்தையும் பெற்றுள்ளது. மேலும் ஒட்டுண்ணிகளை அழிப்பதில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கின்றது. மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் குடல் புழுக்களை அழித்து விடுகின்றது.

* குடல் புழுக்களை அழிப்பதற்கு தைம் இலைகளை பயன்படுத்தலாம். தைம் இலைகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலில் உள்ள புழுக்களை அழிக்கின்றது.

* பூசணி விதைகள் குடல் புழுக்களை அழிப்பது மட்டும் கிடையாது. செரிமான மண்டலத்தில் உள்ள கிருமிகளையும் பூசனி விதைகள் அழிக்கின்றது.

* குடல் புழுக்களை அழிப்பதற்கு நாம் பப்பாளி விதைகளையும் பயன்படுத்தலாம். பப்பாளி விதைகள் குடல் புழுக்களை அழிப்பது மட்டுமில்லாமல் நாடாப்புழு உள்ளிட்ட ஒட்டுண்ணிகளுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை அழித்து வெளியேற்றுகின்றது.

* வேப்ப இலையை அப்படியே.சாப்பிடலாம். அல்லது அரைத்து தண்ணீர் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது குடல் புழுக்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றது. மேலும் இவை குடல் புழுக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. குடலை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது.

* இஞ்சியை நாம் பயன்படுத்தும் பொழுது குடல் புழுக்களை அடியோடு அழித்து விடலாம். அது மட்டுமில்லாமல் இஞ்சியானது நமது வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கின்றது.

* வெள்ளரிக்காயை சாப்பிடும் பொழுது குடலில் உள்ள நாடாப் புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறுகின்றது. மேலும் செரிமான மண்டலம் பலப்படுகின்றது.

* குடல் புழுக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக பயன்படுவது கிராம்பு ஆகும். கிர்ம்பை பயன்படுத்தி குடல் புழுக்களை அழிப்பது மட்டுமில்லாமல் குடலின் சுவர்களில் ஒட்டியிருக்கும் நுண்ணிய ஒட்டுண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் ஆகியவற்றை அழிப்பதற்கு கிராம்பு பயன்படுகின்றது.