Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படக்கூடியவர்கள் உடனடியாக வலியை குறைக்கவும் மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்கவும் நம் வீட்டில் இருந்தபடியே அதனை சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவு மூலமாக காணலாம்.

பெரும்பாலும் இந்த மூட்டுவலியானது இன்றைக்கு உள்ள தலைமுறையில் 40 வயதினருக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்கிறது.இதனை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் இதனை குணப்படுத்தலாம் என்று நாமும் தெரிந்து கொள்ளலாம்.

முழங்கால் மூட்டு உடலில் இருக்கும் மூட்டுகளிலேயே பெரியதாகும். இது காலில் உள்ள தொடை எலும்பும் முதுகெலும்புக்கு கீழ் உள்ள எலும்பும் சேரும் இடத்தில் கால்களை வளைக்க உதவுகிறது.

முழங்கால் வளைவதன் காரணமாக நடக்க ஓட போன்ற பல்வேறு செயல்களை செய்ய முடிகிறது. இதில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் பொழுது நம்மால் இந்த எவ்வித வேலையும் செய்து கொள்ள முடியாது.

இதனை தவிர்க்க நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருள்களான பால்,கீரை பீன்ஸ், மீன் வகைகள், நட்ஸ், பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் இவை அனைத்தும் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். மேலும் நம் உடலில் எவ்வித பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தொடர்ச்சியாக பால் அருந்துவதால் முழங்கால் மூட்டு வலி மற்றும் மூட்டில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. அதனால் தினசரி உணவில் பால் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்துவதால் முழங்கால் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து குணமடையலாம்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், பெருங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து, அடுப்பை இளம் தீயில் வைத்து வதக்கவும். பிறகு அதில் வெள்ளரி மற்றும் உப்பு சேர்க்கவும். கடைசியாக எள், உடைத்த வேர்க்கடலை, சிறியதாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தினசரி செய்து சாப்பிடுவதன் மூலமாக நம் மூட்டுகள் வலுவடைந்து மூட்டு வலி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

Exit mobile version