Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக அழகை கெடுக்கும் பருக்கள் நீங்க வேண்டுமா? அப்போ இந்த இயற்கை முறையை பின்பற்றி பாருங்கள்!!

#image_title

முக அழகை கெடுக்கும் பருக்கள் நீங்க வேண்டுமா? அப்போ இந்த இயற்கை முறையை பின்பற்றி பாருங்கள்!!

இன்றைய நவீன உலகில் உடல் அழகு மற்றும் ஆரோக்கியம் எளிதில் பாதித்து விடும் நிலையில் வாழ்க்கை முறை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் முக அழகை கெடுக்கும் முகப்பரு பாதிப்பால் பலரும் அவதிப்பட்டு வருகிறோம்.

முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடுமென்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் போதும்.

முகப்பரு வரக் காரணம்:-

*அதிக எண்ணெய், நெய், வெண்ணெய் உணவு எடுத்துக் கொள்ளுதல்

*கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட் உள்ளிட்டவைகளை உண்ணுதல்

*கோழி இறைச்சி உண்ணுதல்

*துரித உணவு உண்ணுதல்

*இரசாயனம் கலந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்துதல்

முகப்பரு நீங்க சில வழிகள்:-

*கீரைகள், பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவைகளை சாப்பிடுதல்

*அடிக்கடி முகத்தை கழுவுதல்

*ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் நடப்பது

முகப்பரு நீங்க இயற்கை வழி இதோ…

**முதலில் பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து கொள்ளவும். அடுத்து முகத்திற்கு பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து விடவும்.

தயார் செய்து வைத்துள்ள எலுமிச்சை சாறு + பன்னீர் கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக நீங்கி விடும்.

Exit mobile version