அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.
இளைஞர் நலன் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வு பிரிவை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் இருக்கும் இந்த பிரிவு தமிழக இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பல பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
தமிழக அரசு 2023 மற்றும் 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு நடத்தும் குடிமை பணிகளுக்கான தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கவும் மற்றும் இதர தேவைகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையத்துடன் இணைந்து ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது படி கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி குடிமை பணித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களில் 1000 பேர் மதிப்பீட்டு தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து இந்த உதவித் தொகை பெறுவதற்கான மாதிரித் தேர்வை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாதிரித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று(ஆகஸ்ட்17) கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் 1000 நபர்களுக்கு மாதம் 7500 ரூபாய் என்று 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த தேர்வை எழுதும் நபர்களுக்கு நுழைவுச் சீட்டு 9ம் தேதியும் தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாதிரித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஆகஸ்ட்17) கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு இன்று விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.