பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்

0
144
Want to go so far as to pay so much! People are shocked!

பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்

கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது.பொதுத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு வாரத்­திற்கு நான்கு நாட்கள் மட்டும்  அலுவலகத்தில் வேலை  என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இன்  நிலையில்   மீதமுள்ள நாட்கள் முழுவதும்  வீட்டில் இருந்து பணியாற்றலாம். எனவும் உணவு தட்டுப்பாடும் அதிகம் உள்ள காரணத்தால் ஐநா­வின் உலக உணவு திட்­டத்­தின் கீழ் கொழும்­பில் உள்ள 2,000 கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு உணவு  பெறுவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் இல்லாத காரணததால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் 22 சதவீதம் வரை உயர்வு எனவும் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.