Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

#image_title

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…!
கண்களுக்கு பாதுகாப்பே கண் இமைகள் தான். பலர் அழகு பராமரிப்பில் இன்று சருமத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்களுக்கு கொடுப்பதில்லை. சிலர் கண்களில் காஜல், மஸ்காரா பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் கண் இமைகளை அடர்த்தியாக காட்டுவதற்கு போலியான ஐலாஷ்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், இது கண்களின் ஆரோக்கியத்திற்கு பல வகையில் கேடு விளைவிக்கும். எனினும், இயற்கையான முறையில் கண் இமைகளை அடர்த்தியாக்க முடியும். அதற்கு ஏராளமான யுக்திகள் உள்ளன. இயற்கையான முறையை பயன்படுத்தும்போது, கிடைக்கும் ரிசல்ட் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். இதனால் ஒரு பக்கவிளைவுகளும் இருக்காது.

சரி வாங்க கண் இமைகளை எப்படி அடர்த்தியாக வளர்க்கலாம் என்று பார்ப்போம் –

தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கச் செல்லும் மன் கண் இமைகளில் தடவலாம். இதுமாதிரி தொடர்ந்து 2 மாதங்கள் செய்தால், கண் இமைகளில் முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் கண் இமைகளில் உள்ள முடி நன்றாக வளருமாம். அந்த சீப்பில் வைட்டமின் ஈ எண்ணெய்யை தடவி சீவலாம். வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இப்படி செய்வதால் கண்களில் அரிப்பு ஏற்படாது. தினமும் இப்படி செய்தால் கண் இமை முடிகள் நன்றாக வளரும்.

இரவில் தூங்கச் செல்லும் முன் கண் இமைகளில் வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கண் இமைகள் நன்றாக வளரும்.

கண் இமைகள் நன்றாக வளர வேண்டும் என்றால், புரோட்டீன் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் நாம் மிக அழகாக மாறலாம்.  கண் இமைகளும் நன்றாக வளரும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

Exit mobile version