அதிவேகமாக தலைமுடி வளர்ச்சி அடைய வேண்டுமா? கீழாநெல்லி வேர் மட்டும் போதும்! 

0
199
Want to grow hair faster? Gizhanelli root alone is enough!
அதிவேகமாக தலைமுடி வளர்ச்சி அடைய வேண்டுமா? கீழாநெல்லி வேர் மட்டும் போதும்!
நம்முடைய தலைமுடி அதிக வேகமாக வளர்ச்சி அடைய கீழாநெல்லி செடியின் வேரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாம் அனைவருக்கும் அதாவது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் ஒரே கவலை தலைமுடி பற்றியது தான். ஒன்று தலைமுடி உதிர்கின்றது என்று கவலைப்படுவோம். மற்றொன்று தலைமுடி வளர்ச்சி அடையவில்லையே என்று கவலைப்படுவோம். இதில் இரண்டாவதாக இருக்கும் தலைமுடி வளர்ச்சி பற்றிய கவலையை எளிமையாக சரிசெய்யலாம்.
அதாவது மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லி செடி பயன்படுகின்றது. இந்த கீழாநெல்லி செடி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி மேலும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது. முக்கியமாக கீழாநெல்லி செடியை நாம் தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
கீழாநெல்லி செடியின் வேர்ப் பகுதி தான் தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகின்றது. தலைமுடி நீளம் இல்லை என்று கவலைப்படும் பெண்கள், தலைமுடி வளர்ச்சி இல்லை என்று கவலைப்படும் பெண்கள் அனைவரும் கீழாநெல்லி செடியின் வேரை பயன்படுத்தி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்று தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கீழாநெல்லி செடியின் வேர்
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
முதலில் கீழாநெல்லிச் செடியின் வேர்ப் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின்னர் தேங்காய் எண்ணெயில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள இந்த கீழாநெல்லி வேரை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். தேங்காய் எண்ணெயை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் கீழாநெல்லி வேரில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் இந்த தேங்காய் எண்ணெயில் இறங்கும்.
ஒரு சில நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து பின்னர் இதை இறக்கி விட வேண்டும். அதன் பின்னர் இந்த எண்ணெயை ஆற வைத்து காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த எண்ணெயை நாம் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரத் தொடங்கும்.