Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!!

#image_title

கருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!!

கூந்தல் நன்கு கடுமையாக வளர வேண்டும் என்றால் செம்பருத்தியை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். இதன் மூலமாக முடியை நன்கு கருப்பாக வளரச் செய்யலாம். மேலும் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இந்த எண்ணெயை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தற்பொழுதைய காலத்தில் அனைவரும் உடலின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றோம். அதை விட நமது முகத்தின் அழகிற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் பெண்கள் கூந்தல் மிக நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு என்று பலவிதமான எண்ணெய்கள், சேம்புகள் மற்றும் மாத்திரைகள் கூட எடுப்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இயற்கையான வழிமுறையில் பக்க விளைவுகள் இல்லாமல் தலைமுடி கருப்பாக வளர்வதற்கு ஒரு எண்ணெய் தயாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்…

* செம்பருத்தி பூ இதழ்கள் – 10
* செம்பருத்தி இலைகள் – 10
* தேங்காய் எண்ணெய் – ஒரு கப்

செய்முறை…

செம்பருத்தி பூ இதழ்கள் 10 மற்றும் செம்பருத்தி இலைகள் 10 எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய பாத்திரம் வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைக்க வேண்டும். தலைமுடியை கருமையாக வளரவைக்கும் எண்ணெய் தயாராகி விட்டது.

இந்த எண்ணெயை எடுத்து தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் தலையையும் முடியையும் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழிந்து இரசாயனம் குறைவாக உள்ள ஷாம்பு கொண்டு தலையை கழுவ வேண்டும்.

இதை வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம். இதன் மூலமாக தலைமுடி நன்கு கருமையாக வளரும். மேலும் முடி உதிர்தல் தடுக்கப்படும். மேலும் தலை முடி நன்கு வலிமை பெறும்.

Exit mobile version