முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்.. அசந்துவிடுவீங்க!

0
80
#image_title

முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்… அசந்துவிடுவீங்க!

நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் செம்பருத்திக்கு தனி இடம் உண்டு.

ஏனென்றால், செம்பருத்தி பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நாட்டு மருத்துவத்தில் செம்பருத்தியை அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

சரி… செம்பருத்தியை பயன்படுத்தி நம் தலைமுடியை எப்படி வளர வைப்பது என்று பார்ப்போம் –

வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை சரி செய்ய, செம்பருத்தி பூவை நன்றாக அரைத்து, அதை தலையில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு குறைந்து முடி செழித்து வளரும்.

முடி கொத்துக்கொத்தாக கொடுபவர்கள், செம்பருத்தி பூ பொடியை பயன்படுத்தினால், உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, நுண்கிருமிகள் அழியும். முடி செழித்து வளரும்.

முடி செழித்து வளர, அகத்தி கீரையை நன்றாக அரைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சேர்த்து  தைலப்பதத்தில் காய்ச்சி, அதை தலை குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி கொட்டும் பிரச்சினை சரியாகும். உடலும் குளிர்ச்சி அடையும். கண்ணில் நீர் வடிதல் சரியாகும்.

முடி செழித்து வளர பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, எலுமிச்சை சாறு, சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி அதை குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் குளித்தால் முடி கொட்டுதல் கட்டுப்படும். தலையில் அரிப்பு, கண்கள் சிவந்துபோவது போன்ற பிரச்சினை குணமாகும்.