Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

#image_title

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

நமக்கு முடி நீளமாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர்ச்சி அடைவதற்கு உதவும் வகையிலான ஹெர்பல் ஆயிலை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும் ஒரே பிரச்சனை முடி உதிர்தல் பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்ய பல்வேறு வகையிலான செயற்கை மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது நமக்கு இருக்கும் பிரச்சனையை சிறிது சிறிதாக அதிகரிக்குமே தவிர குறைக்காது.

இதனால் முடி வளர்ச்சி குறைகின்றது. முடி அடர்த்தி தன்மையும் குறைகின்றது. இதற்கு காரணம் நம் உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடு தான் காரணம். மேலும் சிலருக்கு உடல் சூடு இருப்பதும் முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இதை சரி செய்யும் இயற்கையான ஹெர்பல் ஆயில் எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஹெர்பல் எண்ணெயை தயாரிக்க தேவையான பொருள்கள்…

* தேங்காய் எண்ணெய்
* செம்பருத்தி பூ இதழ்கள்
* வெந்தயம்

தயார் செய்யும் முறை…

அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு வெந்தயம், 5 ரோஜா பூ இதழ்கள் சேர்த்து தேங்காய் எண்ணெயை குதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறும். பின்னர் வாசனை வரும். அவ்வாறு நிறம் மாறி வாசனை வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விட்டு இறக்கி இறைக்க வேண்டும். ஆறிய பின்னர் இந்த எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை…

தயார். செய்து வைத்துள்ள ஹெர்பல் ஆயிலை தினமும் முடியின் வேர்கால்களில் தடவ வேண்டும். இதை தவிர்த்து 15 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலமாக பொடுகுத் தொல்லை நீங்கும். முடி ஆரோக்கியம் வளர்ச்சி அடையும். நமக்கு ஏற்படும் இளநிலை பிரச்சனையை தடுக்கும். மேலும் முடியின் அடர்த்தியை ஏற்படுத்தும்.

Exit mobile version