தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..
பெண்களுக்கு அழகு சேர்ப்பதே கூந்தல் தான். அதிலும் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் அழகே தனி தான். நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் ரொம்ப தன்னம்பிக்கையாக இருப்பார்கள்.
ஆனால், இந்த காலத்தில் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக அக்கறை அவங்கள் காட்டமாட்டார்கள்.
ஷாம்புவில் உள்ள ரசாயனம் முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்து முடி கொட்டுதலை ஏற்படுத்திவிடும். இதனால், தலை முடி உடைதல், முடியில் வெடிப்பு, பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படும்.
சரி… எப்படி கூந்தலை பாதுக்க வேண்டும் என்று பார்ப்போம் –
தலைக்கு குளித்த உடன் முடியை காயவைக்க வேண்டும்.
சுருட்டை முடி இருப்பவர்கள் கூந்தலை நன்கு உலர்த்திய பிறகு சீவ வேண்டும்.
முடியை இறுக்கமாக பின்னக்கூடாது.
இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கொண்டை போடக்கூடாது.
இரவு தூங்குவதற்கு முன் கூந்தலை நன்றாக சீவிவிடுவது நன்று.
சிக்கல் கூந்தலுடன் தூங்கினாள் பாதிப்பு அதிகமாகும்.
தலையில் வியர்வையினால் ஈரப்பதம் இருந்தால் மயிர்க்கால்கள் பாதிப்படையும். இதனால், பொடுகுத் தொல்லை, எரிச்சல் ஏற்படும்.
இரவில் தலைக்கு குளித்தால் கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு தூங்க வேண்டும்.
இரவு தலையில் எண்ணெய் வைத்து படுத்து தூங்கினால், முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இரத்த ஓட்டமும்
அதிகரிக்கும்.
இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தூங்கிவிட்டு காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
சிறிது கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4 இரண்டையும் நன்றாக அரைத்து அதில் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.
வாரம் ஒரு முறை செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி நன்றாக வளரும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளித்து வர வேண்டும்.
கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.