உடலில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்கை மறைக்க வேண்டுமா? இதோ சில எளிமையான டிப்ஸ்!
நம்முடைய கை, கால்கள், இடுப்புப் பகுதியில் பார்த்தால் வரி வரியாக இருக்கும். அதுவும் கால்களில் முட்டிகள், தொடைகள், கைகளில் அக்குள் பகுதிகளிலும் தோன்றும். இதற்கு ஸ்ட்ரெக் மார்க் என்று பெயர்.
இந்த ஸ்ட்ரெக் மார்க்ஸ் ஏற்படுவதற்கு பல காரணம் உள்ளது. உடல் எடை அதிகரிப்பது முக்கிய காரணமாகும். மேலும் பருவமடைதல், கர்ப்பம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகிய காரணங்களால் நம்முடைய உடலில் உள்ள தோல் விரிவடைகின்றது. அவ்வாறு தோல் விரிவடையும் பொழுது இந்த ஸ்ட்ரெக் மார்க்ஸ் உருவாகின்றது.
இந்த ஸ்ட்ரெக் மார்க்ஸ் பலருக்கும் பலவிதமான சங்கடமான சூழ்நிலையை ஏற்படுகின்றது. இந்த ஸ்ட்ரெக் மார்க்ஸ் அனைத்தையும் மறைய வைக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய எளிமையான டிப்ஸ்:
* உடலில் உள்ள ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய நாம் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து உடலில் ஸ்ட்ரெக் மார்க்ஸ் இருக்கும் இடங்களில் தேய்த்து 15 நிமிடம் கழிந்து வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஸ்ட்ரெக் மார்க் மறையும்.
* உடலில் உள்ள ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயுடன் ஒரு சொட்டு லாவண்டர் எண்ணெயை கலந்து பின்னர் இதை ஸ்ட்ரெக் மார்க் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் ஸ்ட்ரெக் மார்க் மறையும்.
* உடலில் உள்ள ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயை ஸ்ட்ரெக் மார்க்ஸ் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் போதும். ஸ்ட்ரெக் மார்க்ஸ் மறையத் தொடங்கும்.
* நம்முடைய தொடைகளில் இருக்கும் ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். ஒரு பருத்தி துணியை எடுத்து ரோஸ் வாட்டரில் தொட்டு அதை ஸ்ட்ரெக் மார்க்ஸ் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஸ்ட்ரெக் மார்க்ஸ் மறையத் தொடங்கும்.
* உடலில் இருக்கும் ஸ்ட்ரெக் மார்க்கை மறையச் செய்ய நாம் வைட்டமின் ஈ ஆயிலை பயன்படுத்தலாம். அதாவது வைட்டமின் ஈ மாத்திரையை எடுத்து அதில் உள்ள ஆயிலை மட்டும் எடுத்து உடலில் ஸ்ட்ரெக் மார்க்ஸ் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் மறையத் தொடங்கும்.