சருமத்தின் அழகை மேம்படுத்த வேண்டுமா? காபி, டீயை ஒதுக்கிவிட்டு இதை குடிங்க!!,

0
306
#image_title

சருமத்தின் அழகை மேம்படுத்த வேண்டுமா? காபி, டீயை ஒதுக்கிவிட்டு இதை குடிங்க!!

நம்முடைய சருமத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நாம் காபி, டீக்கு பதிலாக என்ன குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் இரத்தம் குறைவாக இருப்பது தான். அதாவது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது தான். இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் நாம் அதிகமாக காபி, டீ குடிக்கும் பொழுது உடலில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். இதை தடுக்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் கேரட் ஜூஸ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* கேரட்
* சீரகத்தூள்
* பால்
* நாட்டு சர்க்கரை

செய்முறை…

முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் கேரட்டை சுத்தப்படுத்தி சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த கேரட்டை காய்ச்சி வைத்துள்ள பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் சீரகத்தூள் சேர்த்து நான்கு கலந்து கொள்ளை வேண்டும். இறுதியாக இதில் இனிப்புக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளலாம். முடிந்த அளவு வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

சாதாரணமாக கேரட் மற்றும் பால் வைத்து கேரட் ஜூஸ் தயாரித்து குடிப்பதை விட நாட்டு சர்க்கரை மற்றும் சீரகத்தூள் சேர்த்து கேரட் ஜூஸ் தயார் செய்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் உடல் எப்பொழுதும் நீரேற்றத்துடன் இருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் அழகாகத் தெரியும்.

இந்த ஜூலை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த கேரட் ஜூலை குடிக்கத் தொடங்கிய ஒரிரு நாட்களிளேயே உங்கள் முகம் பொலிவு பெறுவதை நீங்களே பார்க்கலாம்.