நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

0
147

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வேலைகள், மது, புகை பழக்கம் , தூக்கமின்மை இவை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைவதற்கான காரணமாகும்.

இதனை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்வது என்று காணலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பேரிச்சம் பழம் ஆகும் இதில் அதிகப்படியான இரும்புச்சத்து அடங்கியுள்ளது தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்கு தேவையான சக்தியை பெற முடியும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் .வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையானது விட்டமின் சி ஆகும் இது அதிகம் நிறைந்தது எலுமிச்சை பழம் இதில் உள்ள வைட்டமின் சி ஆனது சளி மற்றும் இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சம் பழ ஜூஸ் அதிகம் சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மஞ்சள் இவை இயற்கையான ஆன்டிபயாட்டிக் சத்து நிறைந்த பொருளாகும் மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்க கூடிய தன்மை கொண்டது இவை காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டு ஆகியவற்றை கலந்து குடிப்பதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.