Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

#image_title

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

நமக்கு 10 நொடிகளில் தூக்கம் வருவதற்கு மிலிட்டரி டெக்னிக் என்று அழைக்கப்படும் இராணுவ தூக்க முறையை எவ்வாறு பின்பற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஊருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கின்றது. தூக்கத்தை வரவழைக்க நாம் பலவித முறைகளை பின்பற்றுகிறோம். தற்பொழுது உள்ள காலத்தில் ஒரு சிலருக்கு தூக்க மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒரு சிலர் தூக்க. மாத்திரை எடுத்துக் கொண்டால் தூக்கம் வருவது இல்லை என்று கூறுகின்றனர்.

இதற்கு காரணம் நம் உடலில் உள்ள சத்து குறைபாடு, உடலை அழைக்காமல் இருப்பது போன்ற பலவற்றை கூறினாலும் ஆய்வின் படி தூக்கமின்மை என்பது நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது.

அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசனை செய்தால் மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும். இதை இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது நமக்கு தூக்கம் தடைபடும். தூக்கமின்மை பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் மன நலனும் பாதிக்கப்படும். எனவே 10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்கும் இராணுவ தூக்க முறையை பற்றி பார்க்கலாம்.

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்கும் இராணுவ தூக்க முறை…

* முதலில் நம் முகத்தில் இருக்கும் தசைகளை நாம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

* தோள்களை தொங்கவிட்டு பின்னர் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். அதற்கு பின்னர் மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்.

* உங்களின் மார்புப் பகுதியையும் கைகளையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* கால்கள் மற்றும் தொடைகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் அடுத்த 10 நொடிகளில் உங்கள் மனம் அனைத்து வித சிந்தனைகளில் இருந்து வெளியே வந்துவிடும். உங்கள் மனம் அமைதி பெறும். 10 நொடிகளில் தூக்கம் வந்துவிடும். அவ்வாறு தூக்கம் வரவில்லை என்றால் இதே யுத்தியை திரும்ப செய்ய வேண்டும்.

Exit mobile version