Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ “கற்றாழை + பன்னீர்” ட்ரை பண்ணுங்க!

#image_title

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ “கற்றாழை + பன்னீர்” ட்ரை பண்ணுங்க!

முகத்தில் உள்ள அழுக்கு, கருமை 7 தினங்களில் குணமாக இயற்கை தீர்வு இதோ.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)பன்னீர்
3)வைட்டமின் ஈ கேப்சியூல்

செய்முறை:-

ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கொள்ளவும்.

பிறகு அதில் பன்னீர் ஊற்றி நன்கு கலந்து விடவும். அடுத்து வைட்டமின் ஈ கேப்சியூல் போட்டு நன்கு கலந்து விடவும். இவ்வாறு செய்வதினால் ஒரு க்ரீம் பதத்திற்கு வரும். இந்த க்ரீமை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், அழகாகவும் மாறும்.

1)அரிசி மாவு
2)கடலை மாவு

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரிசி மாவு போட்டு நன்கு கலந்து விடவும். இதில் சிறிது பன்னீர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.

1)வெந்தயம்
2)பச்சை பயறு

மிக்ஸி ஜாரில் 1/4 கப் வெந்தயம் மற்றும் 1/4 பச்சை பயறு போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதில் சிறிதளவு பொடி எடுத்து தண்ணீர் ஊற்றி கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் தடவி வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

Exit mobile version