சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!!

0
86
#image_title

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!!

சருமத்தை ஆரோக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் சமையலறையில் உள்ள சில பொருள்களை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

நாம் நம்முடைய சருமத்தை பாதுகாத்து கெள்வதற்கு தற்பொழுதைய காலத்தில் பல செயற்கையான பொருள்களை பயன்படுத்தி வருகின்றோம். இந்த செயற்கையான பொருள்கள் உடனடியான தீர்வு கொடுத்து மெதுவாக நமது சருமத்திற்கு தீமை கொடுக்கின்றது.

இந்த செயற்கை பொருள்களுக்கு மாற்றாக நாம் இயற்கை முறையிலான வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம். இதற்கு நமது வீட்டில் சமையலறையில் இருக்கும் சில போட்டிகள் போதும். அவ்வாறு நமது சருமத்தின் ஆரேக்கியத்தை பாதுகாக்கும் அந்த சமையலறை பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சமையலறை பொருட்கள்…

* முகத்தை எப்பொழுதும் ஈரப்பதம் வைத்துக் கொள்வதற்கு தேன் பயன்படுத்தலாம். தேனை பயன்படுத்தும் பொழுது நமது சருமம் வறட்சி அடையாமல் எப்பெழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

* சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் நாம் தக்காளியை பயன்படுத்தலாம். தக்காளியை ஜூஸாக தயார் செய்து குடிக்கலாம். அல்லது தக்காளியை முகத்தில் தேய்த்துக் பயன்படுத்தலாம்.

* முகத்தை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு தயிர் பயன்படுத்தலாம். தொடர்ந்து தயிர் சாப்பிட்டு வரும்பொழுது முகம் மென்மையாக மாறும்.

* சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள பச்சை தேயிலை தேநீர் தயார் செய்து குடிக்கலாம்.

* வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடா பழத்தையும் நாம் சரும ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளலாம்.

* நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிரோக்கோலியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸையும் நமது உணவாக எடுத்துக் கொள்ளலாம் பொழுது சருமம் ஆரோக்கியம் மேம்படும்.