உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றது என்று தெரிய வேண்டுமா? இதோ அதற்கான வழிமுறைகள்! 

0
281
Want to know how many SIM cards are on your Aadhaar card? Here are the instructions !!
உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றது என்று தெரிய வேண்டுமா? இதோ அதற்கான வழிமுறைகள்!!
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டையின் மூலமாக சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் நம்முடைய ஆதார் அட்டையில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கியுள்ளோம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் ஆதார் அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் வந்து விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அடையாள அட்டை தேவைப்படுகின்றது. அவ்வாறு கட்டாயமாகத்  தேவைப்படும் ஆதார் அடையாள அட்டையை வைத்து பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இந்த மோசடிகள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பல மோசடிகளுக்கு காரணமாக இருக்கும் ஆதார் அட்டையில் எத்தனை சிம் வாங்கியுள்ளோம் என்பது குறித்து பார்க்கலாம்.
ஆதார் அட்டையில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கியுள்ளோம் என்பதை அறிவதற்கான வழிமுறைகள்…
* முதலில் உங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் புரோசரை திறந்து அதில் https://samcharsaathi.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதன் பின்னர் அதில் இரண்டாவதாக இருக்கும் சிட்டிசன் சென்ட்ரிக் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
* அதன் பிறகு மொபைல் என் என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் கேப்சாவையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
* பின்னர் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
* அதன் பின்னர் வரும் பக்கத்தில் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.
* மேலும் உங்களுடைய மொபைல் நம்பர் இல்லாமல் மற்ற மொபைல் நம்பர்கள் இருந்தால் அதையும் நாம் தடுத்துக் கொள்ளும் வகையில் அதில் ஆப்சன்கள் அமைக்கப்பட்டுள்ள