Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!!

#image_title

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!!

எக்ஸ் பக்கத்தில் பயனர் ஒருவர் நிலவில் வண்டி ஓட்டும் அனுபவம் வேண்டும் என்றால் என்று பதிவிட்டு பகிர்ந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.

சென்னை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில பகுதிகளில் உள்ள முக்கியமான சாலைகள் அனைத்தும் படுபயங்கரமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அங்கு அதிகமாகவே இருக்கின்றது.

சென்னையில் உள்ள இந்த சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு வாய்ப்புகளை தருகின்றது என்று சொன்னால் மிகை ஆகாது. அதாவது நீங்கள் பெரிய பள்ளத்தில் வாகனம் ஓட்டுகிறீர்களா அல்லது சின்னதாக உள்ள பல குட்டி பள்ளங்களில் வண்டி ஓட்டுகின்றீர்களா என்ற இரண்டு வாய்புகளை மட்டும் தரும் வகையில் சென்னையில் சாலைகள் உள்ளது.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் அறப்போர் இயக்கம் “உங்களுக்கு நிலவில் வாகனம் ஓட்டுவது போன்ற அனுபவம் வேண்டுமா? அப்போ சென்னை வியாசர்பாடிக்கு வாங்க” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றையும் பகிரந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் அறப்போர் இயக்கம் அந்த வீடியோவுடன் சேர்த்து “இது போன்ற அபூர்வ சாலைகள் உங்கள் பகுதிகளில் இருந்தால் https://t.co/TEHztdhnrw என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பார்த்த பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் நிலவில் பயணம் செய்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் இந்த சாலையில் பயணம் செய்ய சற்று கஷ்டப்படும் என்று பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version