தற்பொழுது வாழ்க்கை முறை நவீனமாகிவிட்ட நிலையில் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நம் சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வாருங்கள்.
1)சுவாசப் பிரச்சனை
கற்பூரவல்லி,மிளகு மற்றும் சுக்கை கொண்டு கசாயம் செய்து பருகி வந்தால் சுவாசப் பிரச்சனை முழுமையாக நீங்கும்.
2)அஜீரணம்
ஒரு பீஸ் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை அரைத்து நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
3)வாயுக் கோளாறு
வேப்பம் பூவை பொடித்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் வாயுக் கோளாறு நீங்கும்.பெருங்காயத்தை நீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் வாயுத் தொல்லை கட்டுப்படும்.
4)மலச்சிக்கல்
தினமும் ஒரு கிளாஸ் செம்பருத்தி தேநீர் பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.குடிக்கும் நீரில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
5)தேமல்
ஒரு வெள்ளை பூண்டை நசுக்கி தேமல் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
6)இதய நோய்
தினமும் ஒரு கிளாஸ் மூலிகை பானம் பருகி வந்தால் இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.
7)மஞ்சள் காமாலை
கீழாநெல்லி இலை,தும்பை இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலையை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
8)வயிற்றுப் போக்கு
பாலில் சிட்டிகை அளவு வசம்புத் தூள் சேர்த்து பருகினால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும்.
9)மது பழக்கம்
இலவங்கப்பட்டை,நெல்லிக்காயை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து நீரில் கொதிக்க வைத்து பருகினால் மது பழக்கத்தில் இருந்து மீண்டுவிடலாம்.
10)கால் ஆணி
ஒரு பீஸ் வசம்பு,ஒரு பீஸ் மஞ்சள் கிழங்கு மற்றும் மருதாணி இலையை தண்ணீர்விட்டு அரைத்து கால் ஆணி மீது பூசினால் சில தினங்களில் அவை குணமாகிவிடும்.
11)தோல் நோய்
கண்டங்கத்திரி பழத்தை அரைத்து தோலில் பூசி குளித்தால் தேமல்,சொறி,சிறங்கு,தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
12)வாந்தி
சதகுப்பை பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் வாந்தி,குமட்டல் உணர்வு நிற்கும்.இஞ்சியை இடித்து சாறு எடுத்து பருகி வந்தால் வாந்தி,குமட்டல் உணர்வு கட்டுப்படும்.