உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிரிங்க்!
உடல் எடை குறைய தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.நம் அன்றாட வாழ்வில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை மிக பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு கப் வெந்நீர் கலந்து இரவு முழுவதும் உற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து பருகி வருவதன் காரணமாக நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சீரகத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் செரிமானத்தை சீர்படுத்தி வயிற்றில் எவ்வித நச்சு கழிவுகளையும் தங்காதவாறு பாதுகாக்கிறது. சோம்பில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமன் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. நுரையீரலின் சுவாசப் பாதைக்கு உணர்ச்சி அளிக்கிறது எனவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மேற்கண்ட ட்ரிங்க்கை செய்து தினமும் குடித்து வந்தால் உடல் பருமன் குறைய தொடங்கும்.